சென்னையில் உள்ள கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரிந்து வரும் நிலையில் அவரை இன்று 25 வயதுடைய வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை எனவும் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அதாவது தமிழகத்தில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் நாள்தோறும் நடக்கும் சட்ட ஒழுங்கு சீர்கேடு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் இனியாவது விழித்துக் கொண்டு இந்த பிரச்சனைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

காலநேரம் பார்க்காமல் மக்கள் நலனுக்காக உழைக்கும் மருத்துவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர் இந்த ஆட்சியில் நாள்தோறும் குற்ற செயல்கள் என்பது அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் சட்ட ஒழுங்கு என்பது சீர்கெட்டு விட்டது என்பதை தினம் தினம் நடக்கும் சம்பவங்கள் உணர்த்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக அரசின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் விஜய் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.