வேலூரில் உள்ள கோட்டை மைதானத்தில் இலக்கு 2026 என்ற தலைப்பில் அதிமுக மாநாடு நடைபெற்ற நிலையில் இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, மும்மொழி கொள்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரி கிடையாது.

தமிழகத்தை பொறுத்தவரையில் எப்போதும் இரு மொழிக் கொள்கை மட்டும்தான் இதில் மாற்றம் கிடையாது. எனவே தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் நிதி கொடுப்போம் என்று கூறுவது சரி கிடையாது தமிழகத்தில் இருக்கும் ஆட்சியாளர்களை பார்க்காமல் மக்களை பார்த்து மட்டும் நிதி கொடுங்கள். அதிமுக யாரை நம்பியும் இருந்தது கிடையாது. மக்களை நம்பி தான்  இருக்கிறது. மேலும் நாங்கள் யாரை ஒட்டியும் அரசியல் செய்தது கிடையாது என்று கூறினார்