தமிழக அரசின் சார்பாக படித்த வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி படித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு 600 வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவடைந்த இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை இதை விட கூடுதல் ஆகும். பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. இதற்கான விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த உதவித்தொகையினை பெற தகுதி உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தங்கள் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை மார்ச் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட தொழில் நெறி வழி காட்டும் மைய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.