
தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் துறைகள் இணைந்து அடிக்கடி மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதன்படி தற்போது தமிழக தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பள்ளிகளில் Principal vice principal உள்ளிட்ட பதவிகளில் சுமார் 248 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் சுமார் 3548 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் Kindergarten, Primary ஆகிய பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி சென்னை மான்போர்ட் மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.