
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்த நிலையில் அந்த சுரங்கம் வரக்கூடாது என்று மதுரை மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசும் கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் வராது என்று உறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்திக்க பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, டங்ஸ்டன் விவகாரத்தில் அரிடாப்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளைச் சேர்ந்த தலைவர்களை பாஜகவினர் டெல்லிக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் நாளை மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை நேரில் சந்திக்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை பிற்பகலுக்கு மேல் கண்டிப்பாக மகிழ்ச்சியான செய்தி வரும். இந்த பிரச்சனை குறித்து தெரிந்த பிறகு அதற்கு தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம் என்று கூறினார்.