
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுவாதி கொலையின் போது மூத்த நீதிபதியாக இருந்த கிருபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த நிலையில் அந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அதில் பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக முழுவதும் இதுவரை 69 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாகவும் இனிவரும் நாட்களில் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாக நடமாடும் வகையில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.