தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 27ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இன்று மதியம் 12 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது வருகிற 25-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நேற்று கரூர் உட்பட 9 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.