
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி இருப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வெப்பநிலையும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் இன்று முதல் வருகிற 20 ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.