இன்று கடைசி சனிக்கிழமை, ரமலான், தெலுங்கு வருடப்பிறப்பு என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் வர இருக்கும் நிலையில் பொதுமக்களுடைய வசதிக்காக இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. வழக்கமாக இந்த மாதத்தின் கடைசி பணி நாளான இன்று கடைசி சனிக்கிழமை என்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அதேபோல நாளை மார்ச் முப்பதாம் தேதி தெலுங்கு வருட பிறப்பு, மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை.

இதன் காரணமாக அன்றைய தினங்களும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினமாகும். மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை என்பதால் பொதுமக்களுடைய நலன் கருத்தில் கொண்டு இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . எனவே மக்கள் வழக்கம் போல ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.