
தமிழகத்தில் தக்காளி வரது குறைந்துள்ளதால் ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட உள்ளனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்வதற்கு அரசு முடிவு செய்து தற்போது ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மளிகை மற்றும் காய்கறி விலை நிலவரத்தை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சென்னையில் மட்டும் தற்போது ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதனை தமிழக முழுவதும் 300 ரேஷன் கடைகளில் விரிவுபடுத்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே விரைவில் தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும் என தெரிகிறது.