
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்படும் நிலையில் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுத் தொகை உயர்த்த அரசு முடிவு செய்த நிலையில் விடுதியில் தங்கி பயலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1500 ரூபாயும் உயர்த்தி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.