தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பாக மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வரும் நிலையில் எச்டிஎப்சி வங்கி வழங்கும் கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து பலரும் அறியாமல் உள்ளனர். பொருளாதார நிலையில் பின் தங்கிய மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. எச்டிஎப்சி வங்கியின் இந்த திட்டத்தின் மூலமாக பிஏ, பிகாம் மற்றும் பிஎஸ்சி போன்ற பட்டப்படிப்பு பயலும் மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

அதனைப் போலவே பி.டெக், பி.ஆர்க், எம்பிபிஎஸ் மற்றும் நர்சிங் பட்டப்படிப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயனடைய மாணவர்கள் முந்தைய தேர்வில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. அது மட்டுமல்லாமல் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் buddy4study என்ற எச்டிஎப்சி வங்கியின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.