
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு புதிய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்படாத நிலையில், தற்போது ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், மாநகரப் போக்குவரத்து கழகங்களில் பணி புரிவதற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
இதற்காக தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அந்த நிறுவனங்களின் சார்பில் 700 ஓட்டுனர்கள் மற்றும் 500 நடத்துனர்களை பணிக்கு அனுப்ப வேண்டும். இதில் ஓட்டுநர்களுக்கு மாத ஊதியமாக ரூ.27,934-ம், நடத்துனர்களுக்கு மாத ஊதியமாக ரூ.27,594-ம் வழங்கப்படும். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாதங்கள் ஒப்பந்த காலமாகும். மேலும் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி ஆகும்.