தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 234 தொகுதிகளிலும் கொடியினை ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ‌ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நிர்வாகிகள் கொடியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சிலர் பொது இடங்களில் அனுமதி இன்றி கொடி ஏற்றுவதாக தலைமைக்கு புகார் வந்துள்ளது. இதனால் அனுமதி இன்றி எந்த ஒரு இடத்திலும் கொடி கம்பங்கள் வைக்கக்கூடாது என நிர்வாகிகளுக்கு தலைமை உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவை மீறி கொடிக்கம்பங்கள் நட்டு கொடியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை எச்சரித்துள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கொடியினை சமீபத்தில் அறிமுகப்படுத்திய நிலையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் 40 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழக முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக கொடி ஏற்றப்பட்டு வருகிறது.