தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் பருப்பு, அரிசி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இவற்றை புகாருக்கு இடமின்றி முறையாக வழங்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேவைப்படும் இடங்களில் கூடுதல் ரேஷன் கடைகளை திறக்க உத்தரவிட்ட அமைச்சர், ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் ஒதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.