
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பருப்பு பதக்கம் செய்யப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும் துவரம் பருப்பு மற்றும் உளுந்து போற்றவற்றின் கொள்முதல் இந்தியாவில் குறைந்து விட்டதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களில் இருக்கும் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பருக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கான அரிசியை மத்திய அரசு இலவசமாக வழங்கி வரும் நிலையில் மற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்திய உணவு கழகத்திடம் இருந்து தமிழக நுகர்வோர் வாணிப கழகம் வாங்குகிறது. இதனிடையே திடீரென அரிசி மற்றும் பருப்பு விநியோகத்தை அரசின் நிறுத்தியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இது தொடர்பாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், விவசாயிகளிடமிருந்து 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு உள்ளது. அதனால் மத்திய அரசின் அறிவிப்பை அமல்படுத்தி அரிசி விற்பனையை நிறுத்தினாலும் தமிழக ரேஷன் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.