தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்பட உள்ளதாக பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்புதல் பெற்று விரைவில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த தகவல் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.