
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது ஒரு சில ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் எனவும் பத்தாயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூட்டுறவுத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் கோதுமை ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும் அவர் அறிவித்துள்ள நிலையில் இனி தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இருக்காது என தெரிந்தது m