தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை, எலியா மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள். ரேஷன் கடைகளில் தற்போது கோதுமையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் ஏற்கனவே உளுந்தம் பருப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவைகளையும் அரசு நிறுத்த இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்  தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது பாமாயில் மற்றும் துவரம் பருப்பு போன்றவற்றை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று அரசு தெரிவித்துள்ளது.