தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தேர்தல் முடிவுக்கு பிறகு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை முறையாக ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்க வில்லை என்றும் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.