தமிழகத்தில் மேற்கு மாவட்டங்கள் ஆன ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் வறட்சியான பகுதிகளில் நிலத்தடிநீரை மேம்படுத்தும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. மேற்கண்ட 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவு கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 280 கோடி நிதி ஒதுக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த திட்டம் தற்போது ரூ.1916 கோடியே 41 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட மாவட்டங்களில் 1045 குளம் குட்டைகளில் நீரை செறிவூட்டுவதற்காக ‌ 1065 கிலோமீட்டர் நீளத்திற்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும் ‌8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் 6 மோட்டார்கள் இயக்கப்பட்டு தண்ணீர் பம்ப் செய்யப்படும். அதன்பிறகு இரு மோட்டார்கள் மாற்று என்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள எலக்ட்ரிக்கல் ஆட்டோ மெஷின் மற்றும் குளம் குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள ஓஎம்எஸ் ஆகியவைகள் இஸ்ரோ தொலைநட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்டவை. இந்த திட்டத்தின் மூலம் பவானி ஆற்றின் காளிங்கராயன் அணையின் கீழ் புறத்தில் இருந்து ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீர், 6 நீரேற்று நிலையங்கள் வழியாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1045 நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்பப்படும். மேலும் இன்று விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு திட்டம் தொடங்கப்பட்டது பெரும் வரவேற்பை‌ பெற்றுள்ளது.