பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் நேற்று கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் போன்றவற்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அவருடைய கட்சிக் கொடியில் இரண்டு போர் யானைகள் வாகைமலர் போன்றவைகள் இருப்பதோடு சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி தொடர்பாக  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் விதமாகவும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் தமிழக வெற்றிக்கழகக் கொடி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் மனுவினை சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்துள்ளார். மேலும் இதற்கு முன்னதாக தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இருக்கும் நிலையில் அது எங்களுக்கு சொந்தமானது என பகுஜன் சமாஜ் கட்சி கூறியிருந்தது. அதோடு தேர்தல் விதிமுறைகளின் படி ஒரு கட்சியின் சின்னத்தை மற்றொரு கட்சி பயன்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக யானை சின்னத்தை நீக்க வேண்டும் எனவும் இல்லையெனில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.