
புதிய அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார்.. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இதையடுத்து நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், விஜயை டேக் செய்து உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா. இந்த புதிய பயணத்தில் உங்கள் வெற்றிக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Congratulations Nanba on your political entry. I pray god for your success in this new journey 💐💐@actorvijay https://t.co/E8HRTU20jp
— Raghava Lawrence (@offl_Lawrence) February 2, 2024