தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூபாய் 150 கோடி மதிப்பிற்கு திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். மாணவர்களுடைய வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாபெரும் வாசிப்பு இயக்கம் செயல் படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்புக்காக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து வரும் பிற மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் தாய் மொழியோடு தங்கு தடை இன்றி தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தமிழ் மொழி கற்போம் இயக்கம் தொடங்கப்படும். அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் என்ற வகையில் ஆறு முதல் 8 வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு பாடத்திற்கும் ஒருவர் என்று குறைந்தபட்சம் ஐந்து பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் எண்ணும் ம் எழுத்தும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்பட கற்றல் கற்பித்தல் உபக ரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்