தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ‌ பரிசுகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் சென்னை முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி 105 தங்கம், 80 வெள்ளி மற்றும் 69 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 254 பதக்கங்களுடன் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.‌

அதன்பிறகு இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு, மூன்றாம் இடத்தில் கோயம்புத்தூர், 4-ம் இடத்தில் சேலம் மாவட்டமும், 5-ம் இடத்தில் ஈரோடு மாவட்டமும் இருக்கிறது. அதன் பிறகு ஆறாவது இடத்தில் திண்டுக்கல், ஏழாவது இடத்தில் திருநெல்வேலி, எட்டாம் இடத்தில் திருவள்ளூர், ஒன்பதாம் இடத்தில் மதுரை, பத்தாம் இடத்தில் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியின் பரிசு வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஒலிம்பிக் என்று சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்ததாக பெருமிதம் தெரிவித்தார்.