தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 5-ம் தேதி திரை அரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய x பக்கத்தில் தற்போது எலான் மஸ்க் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் ஏஐ  புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதோடு டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் வரவேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் அது முதல்வர் ஸ்டாலினின் G.O.A.T நகர்வாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவு வைரலாகி வரும் நிலையில் அதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.