
அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மூவர் அடுத்தடுத்து ஒரே வாரத்தில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு அரசு இயற்றிய முக்கியமான சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி ஆளுநர் மாளிகை அரசுக்கு திருப்பி அனுப்புவதும் விளக்கம் கொடுத்தும் பல மாத காலங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதுமான நடவடிக்கைகள் தொடர்கிறது. இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழந்திருப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே இனி மேலும் தாமதிக்காமல் ஆளுநர் அவர்கள் உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று பாமக நிறுவனர் ராமதாசும் ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இப்போது மேலும் மூன்று பேர் உயிரிழப்பது வரை தாமதம் நேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
எனவே, இனிமேலும் தாமதிக்காது ஆன்லைன் ரம்மி சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.(3/3)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 9, 2023