
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்தில் இந்தாண்டு 37 கிராமங்கள் தேர்வாகியுள்ளதாக அறிவித்தார்.
ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்தில் உரையாற்றிய அவர், “சுயமரியாதை, சமதர்ம சமுதாயத்தை உருவாக்க நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். தீண்டாமைக்கு எதிராக ஜனவரியில் மனிதநேய வார விழா நடத்தப்படும்” என அறிவித்தார்.