
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் உட்பட பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்: சிவகங்கையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதன்மை ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்சியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள்.
வரும் மார்ச் 21,22 தேதிகளில் காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்களை https://sivaganga.kvs.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சம்பளம்: பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26,250, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு 21,250 , சிறப்பு கணிணியாளர் 21,250, தமிழ் ஆசிரியர் 18,250
கல்வித்தகுதி: அந்தந்த பதவிக்கு தகுந்த பாடத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வம் உள்ளவர்கள் நேர்காணலுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்து கொள்ளலாம்.