
பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நேற்று கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். அந்தவகையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கைவெளியிட்டுள்ளார் .
அதில், திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது . பிஎஸ்பி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.