தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், மே 20ம் தேதி ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நெல்லை, குமரி, நீலகிரி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்கிற அடிப்படையில், 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.