
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் 11ம் வகுப்பு தேர்வில் 96.38% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 96.18%, கோயம்புத்தூர் 95.73% தேர்ச்சியுடன் 2, 3வது இடத்தை பிடித்துள்ளது. பெற்றுள்ளனர். ஆண்கள், பெண்களைவிட குறைவான அளவிலே தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை பெரம்பலூர் முதல் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று மாவட்டங்களிலும் பெண்கள் 97.60%, 97.40%, 97.20% தேர்ச்சி பெற்றுள்ளனர்.