
பாஜக யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா. இவர் பெங்களூரு மேற்கு தொகுதி எம்பி ஆவார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி சிவ ஸ்ரீ ஸ்கந்த பிரசாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று சிவஸ்ரீக்கும், தேஜஸ்வி சூர்யாவுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வழக்கறிஞராக இருந்த தேஜஸ்வி சூர்யா பாஜக கட்சியின் இளைஞரணி தலைவராக பொறுப்பேற்ற நிலையில் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு எம்பி ஆனார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அதன்பிறகு சிவஸ்ரீ பாடகி மட்டுமின்றி ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. இவருடைய தந்தை ஸ்கந்த பிரசாத் ஒரு மிருதங்க வித்வான். இதில் சிவ ஸ்ரீ பரதநாட்டியத்தில் பட்டம் பெற்றுள்ள நிலையில் சமஸ்கிருதத்தில் தற்போது முதுகலை படித்து வருகிறார். இவர் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்று இருந்த வீர தீர ராஜா பாடலை கன்னடத்தில் பாடியவர்.
அதன் பிறகு ராமர் கோவில் திறப்பு விழாவின் போது ராமர் பற்றி சிவஸ்ரீ பாடிய பாடலை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தி இருந்தார். இந்நிலையில் சிவஸ்ரீ மற்றும் தேஜஸ்வி சூர்யா இருவரும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் தற்போது திருமணம் செய்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலரும் கலந்து கொண்டனர். இதேபோன்று திரை உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் வருகிற 9-ம் தேதி பெங்களூருவில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.