மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் multi tasking staff (MTS) தேர்வு மற்றும் CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. CRPFகாவலர்கள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.