பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களின் வீட்டுப் பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் படிக்கிறார்கள். ஆளுநர் நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்தின் சில வரிகள் விடுபட்டதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. தமிழ் என்னுடைய உயிரிலும் பெயரிலும் இருக்கிறது. என்னை சமூக வலைதளங்களில் “இந்தி இசை என்று குறிப்பிடுகிறார்கள்”. என்னை இப்படி கேலி செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் ஆளுநர் ரவி கலந்து கொண்ட டிடி தமிழ் தொலைக்காட்சி ஹிந்தி தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்ட போது அதில் திராவிட நல்த் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையாக மாறியது. இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் தமிழிசைக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழிசை சௌந்தரராஜனை சமூக வலைதளங்களில் இந்தி இசை என்று விமர்சிக்கிறார்கள். இது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.