தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் துணிவு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் வெளியான துணிவு படத்திற்கு அங்குள்ள படங்களை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அந்நாட்டு தொலைக்காட்சி சேனல்களில் துணிவு படம் விவாத பொருளாக மாறி உள்ளது. மேலும் வெளிநாட்டு சேனல்களில் தமிழ் நடிகர் ஒருவரின் படம் குறித்து விவாதங்கள் நடைபெறுவது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.