
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பயணம் ஒரு இன்ஸ்பிரேஷன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு ஏழு விருதுகளை தன்வசப்படுத்திய என் தெலுங்கு திரையுலகை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலர் அஜித் குமாருக்கு வாழ்த்து சொல்ல முடியாதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதோடு என் தெலுங்கு திரையுலகம் என்று காஜல் குறிப்பிட்டதால் தமிழ் திரையுலகம் உங்களை வாழ வைக்கவில்லையா? தமிழ் திரையுலகுக்கு இனி வந்து விடாதீர்கள். இங்கு உங்களுக்கு கிடைத்த வெற்றியை கொஞ்சம் நினைத்து பாருங்கள். இனி உங்கள் தெலுங்கு திரையுலகில் மட்டுமே இருந்து கொள்ளுங்கள் என தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.