நடிகர் விஜய் முதலில் மாநாட்டுக்குள்  நுழைந்த நிலையில் கொடி ஏற்றிய பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடிவிட்டு உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை குறித்து அறிவித்ததில் இரு மொழிக் கொள்கைதான் கட்சியின் கொள்கை என்று அறிவித்துள்ளனர். மேலும் அதன்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் என என்ற மொழிகள் மட்டும் தான் தமிழகத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஏற்ற கொள்கை தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி வழிகாட்டும் மொழி என்பது உறுதி செய்யப்படும் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் தமிழை வழக்காடு மொழியாக உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பல தமிழரின் வைகை நதி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும் மாநில உரிமை மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்