தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை இலியானா கடந்த 2006 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானார். இவர் தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கு அவருக்கு அதிகாரப்பூர்வமற்ற தடை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் முன்பணம் பெற்றுக்கொண்ட இலியானா நடிக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளரின் புகாரை தொடர்ந்து அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.