
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். அதாவது 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்தான் தமிழ் புதல்வன் திட்டம். இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் நிலையும் தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆதார் கார்டு அவசியம். இந்த தகவலை அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆதார் மையங்களில் மாணவர்கள் ஆதார் அட்டை பெறலாம். மேலும் அவர்கள் அருகில் ஆதாரம் மையங்கள் இல்லையெனில் கல்வி நிறுவனங்கள் அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.