தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். நாளை தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் புத்தாண்டு தினம் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வெளிவந்த அறிக்கையில்,

பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.

2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!

இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.

அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!