புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் ராசு மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கல்வெட்டு, செப்பேடு, சுவடிகளை பதிப்பித்து தமிழுக்கு தொண்டாற்றிய ராசு மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு என புகழாரம் சூட்டிய ஸ்டாலின், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்