
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு நெட்டிசன் ஒருவர் பதிலளித்துள்ளார்.
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல என முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசியல் விமர்சகர்கள் , மக்கள் பிரதிநிதிகள் என பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ளார்.
அதில், 1990 இல் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பிராத்மிக் ,மத்தியமா, ராஷ்ட்ர பாஷா என 3 தேர்வையும் எழுதி டிஸ்டின்க்ஷன்ல தேர்ச்சி பெற்றேன். இதை படிக்க கூடாது என்று யாரும் என்னை தடுக்கவில்லை. தயவு செய்து பொய் கூற வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இது தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
1990 லயே தமிழ் வளர்த்த மதுரை நகரத்துல நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பிராத்மிக் ,மத்தியமா, ராஷ்ட்ர பாஷா ..3 எக்ஸாமையும்எழுதி டிஸ்டின்க்ஷன்ல பாஸ் பண்ணினேன்….என்னை யாரும் தடுக்கலையே இதை படிக்க கூடாதுன்னு…
No lies please 🙏 pic.twitter.com/7ysQ44MqN1— Prof Sumathi (@ProfSumathi) August 10, 2023