
பொள்ளாச்சியில் நடந்த தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். இப்போதே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நோட்டாவுக்கு விழும் ஓட்டு கூட பாஜவுக்கு கிடைக்காது. மேலும் 17 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்தார்கள் என கூறி வருகிறார்கள்.
தம்பி அண்ணாமலை, அந்த 17 பேரையும் பாஜகவில் சேர்த்தற்குப் பதில், முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால் புண்ணியம் கிடைத்திருக்கும். இதனால் பாஜகவிற்கு பயந்து பென்சில் வாங்கக்கூட பெரியவர்களை வெளியே அனுப்ப பொதுமக்கள் பயப்படுகிறார்கள் என விமர்சனம் செய்துள்ளார்.