நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்தன மூர்த்தி. இவர் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சந்தான மூர்த்தி வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வகுமார்(25) என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 22 லட்ச ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.

ஆனால் கூறியபடி சந்தானமூர்த்தி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப தருமாறு செல்வகுமார் கேட்டார். ஆனால் சந்தானமூர்த்தி பணத்தை கொடுக்காமல் செல்வகுமாரை அலைக்கழித்து வந்தார். இதுகுறித்து செல்வகுமார் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்தான மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.