ஐபிஎல் 18 வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் நேற்று சென்னை மும்பை இந்தியன்ஸ் போட்டியானது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இல்லாதது பலவீனமாகவே இருந்தது. ஆனாலும் சிஎஸ்கேவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி கடும் போட்டியை கொடுத்தது . மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமான விக்னேஷ் புத்தூர் மூன்று விக்கெட்டைகளை வீழ்த்தி அசத்தினார். இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் தோனி அவரை அழைத்து பாராட்டியுள்ளார். இவர் கேரளாவுக்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையா.டி வந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்து அறிமுகப்படுத்தியுள்ளது விக்னேஷின் தந்தை மலப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநராக  பணிபுரிந்து வருகிறார். இவர் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.