தமிழில் சாது மற்றும் ஆளவந்தான் ஆகிய படங்களில் நடித்தவர் தான் பிரபல ஹிந்தி நடிகை ரவீனா டாண்டன்(49). இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ள நிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் இவருடைய கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மூன்று பெண்கள் மீது வேகமாக மோதியுள்ளது.

அப்போது காரில் இருந்து இறங்கிய ரவீனா தனது ஓட்டுநருக்காக அந்த பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்து நபர்கள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அவரை தள்ளியது போன்ற காணொளியும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் தள்ளாதீர்கள் தயவு செய்து என்னை அடிக்காதீங்க என்று ரவீனா கதறுகின்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.