ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18-ம் தேதி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய நிலையில் ஆர் சி பி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை கைப்பற்றியது. இந்த போட்டிக்கு பிறகு ஆர்சிபி வீரர்கள் நீண்ட நேரம் கொண்டாடத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக சென்னை அணி வரிசையில் காத்திருந்த நிலையில் முதல் ஆளாக எம்.எஸ். தோனி நின்றார். ஆனால் அவர் திடீரென ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம் சென்றுவிட்டார். அவர் வழியில் நின்று கொண்டிருந்த ஆர்சிபி பணியாளர்களுக்கு மட்டும் கை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் பலரும் தோனியை விமர்சித்து வந்தனர்.

 

 

இந்நிலையில் தோனியின் ரசிகர்கள் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இதுதான் ஆர்சிபி வீரர்களுக்கும் தோனிக்கும் உள்ள வித்தியாசம் என்று கூறி வருகிறார்கள். அதாவது கடந்த முறை ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்ற போது வீரர்கள் மகிழ்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடனடியாக எம்எஸ் தோனி சிஎஸ்கே வீரர்களை குஜராத் வீரர்களுக்கு கை கொடுத்துவிட்டு வந்து வெற்றியை கொண்டாடலாம் எனக் கூறி அவர்களை அழைத்துச் சென்றார். இந்நிலையில் ஆர்சிபி வீரர்கள் சென்னை அணி வீரர்கள் காத்திருப்பதை பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தோனிக்கு காலில் வலி வந்ததால்தான் அவர் உடனடியாக அறைக்கு சென்றார். மேலும் சிஎஸ்கே வீரர்களை காக்க வைத்த ஆர்சிபி எங்கே குஜராத் வீரர்களை காக்க வைக்காமல் உடனே அழைத்துச் சென்ற தோனி எங்கே என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.