பதஞ்சலி நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரம் இல்லை என்று பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரிநாக் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தார்கள்.

இந்த நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன்பப்டி தரம் இல்லை என்ற அறிக்கையை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உதவி மேலாளர் உட்பட மூன்று பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரகாண்ட் பித்தோராகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.