விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே செவல்பட்டியில் ஜெயா கிருபா என்ற பட்டா ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. உடனே அவசர அவசரமாக தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

முன்னதாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருந்ததால் தீயை அணைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் மூன்று அறைகள் முழுவதும் தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.